அதிகாரி தவற விட்ட ATM அட்டை - சும்மா தேய்த்து தள்ளிய காய்கறி கடைக்காரர் -தொக்காக சிக்கியது எப்படி?
மதுரை எல்லிஸ் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப் படை அதிகாரி கிருஷ்ணசாமி, அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் காய்கறி கடையில் கடந்த வாரம் காய்கறி வாங்கி விட்டு தனது கைப்பையை தவற விட்டுச் சென்றார். பல இடங்களில் தேடியும் கைப்பை கிடைக்காததால் இதுகுறித்து அவர் மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, கிருஷ்ணசாமியின் கைப்பையை எடுத்த லட்சுமணன், அதில் இருந்த ஏடிஎம் அட்டையுடன் ரகசிய எண் இருப்பதை அறிந்து, அதன் மூலம் 2 லட்சத்து 80 ரூபாயை எடுத்துள்ளனர். பின்னர், நேரு நகரைச் சேர்ந்த நாகேஸ்வரி என்பவரின் உதவியுடன், நகைக் கடை ஒன்றில் அவர் நகை வாங்கியுள்ளார். போலீசாரின் விசாரணையில், இந்த விவரங்கள் தெரியவந்ததை அடுத்து, காய்கறி கடைக்காரர் லட்சுமணன், அவருக்கு உடந்தையாக இருந்த நாகேஸ்வரி ஆகிய இருவரிடமும் எஸ்.எஸ்.காலனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.