தனியே தவித்த பெண் குழந்தை - முற்றிப்போன தாய்மாமனின் மண்டகோளறு - காய்ச்சி எடுத்த போலீஸ்

Update: 2024-12-19 13:38 GMT

வேடசந்தூர் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடை முன்பு 3 வயது பெண் குழந்தை நீண்ட நேரமாக தனியாக உட்கார்ந்து இருந்தது.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது

அங்கு வந்த கூவக்காபட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர், தனது அக்கா குழந்தையை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்ததாகவும், ஜெராக்ஸ் கடையில் அக்குழந்தையை உட்கார

வைத்து விட்டு மறதியாக நண்பரை பார்க்க சென்றதாகவும் கூறினார்.

இதையடுத்து அக்குழந்தையை காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார் பெற்றோரை

வரவழைத்து எச்சரித்து பின் குழந்தையை ஒப்படைத்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்