`மின் ஊழியர்கள் உயிரிழப்பு' - "மின்கம்பத்தில் நிற்கும் போது எப்படி மின்சாரத்தை ஆன் செய்யலாம்?"

Update: 2024-12-19 13:13 GMT

ஓலையூர் ரிங் ரோடு பகுதியில் புதன்கிழமைகாலை, மின் வாரிய ஒப்பந்த ஊழியர் மருங்காபுரியை சேர்ந்த உறவினர்களான கலாமணி மற்றும் மாணிக்கம் ஆகியோர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி பணியாற்றி கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கலைமாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாணிக்கம் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவர்கள் இறந்ததற்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம் காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்தவர்களில் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்