திடீரென வந்த shutdown ஆன கரண்ட் - பறிபோன கேபிள் டி.வி. ஊழியரின் உயிர்

Update: 2025-01-09 10:10 GMT

ஆவடி அருகே, பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட மின்சாரம் திடீரென வந்ததால், பணியில் ஈடுபட்டிருந்த கேபிள் டி.வி. ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருநின்றவூர், கன்னியப்பன் நகரைச் சேர்ந்த குமார், கேபிள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். திருநின்றவூர் மின்சார வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பராமரிப்பு பணிகளுக்காக மின்நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், மின்மாற்றி கம்பத்தில் ஏறி இணையதள கேபிள் ஒயரை குமார் சரிபார்த்துள்ளார். அப்போது திடீரென முன்கூட்டியே மின்சாரம் வந்ததால் மின்சாரம் பாய்ந்து குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சடலத்தை போலீசார் கைப்பற்றி, உடற்கூறு சோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்