முன்கூட்டியே வந்த மகளிர் உரிமை தொகை - மகிழ்ச்சியில் பூரிக்கும் பெண்கள்
பொங்கல் விழாவை முன்னிட்டு, பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையை முன்கூட்டியே வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி முதல் 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது, மாதம் தோறும் 14ம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு, மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கும் விதமாக, வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு அதற்கான குறுஞ்செய்தி அனுப்பும் பணி துவங்கியுள்ளது.