ஒட்டுமொத்த மதுரையே குலுங்க நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க வைக்கும் சேதி | Jallikattu | Madurai
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பணிகள் முகூர்த்தக்கால் ஊன்றி துவங்கியது மதுரை மாவட்டத்தில் தை முதல் நாள் ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வாடிவாசல், வேலி, அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் மூர்த்தி முகூர்த்த கால் ஊன்றி தொடங்கி வைத்தார்.முன்னதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்குவதற்கு முன்னோட்டமாக அவனியாபுரம் மந்தையம்மன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து, பின்னர் மார்க்கண்டேயன் கோவில் அருகே வாடிவாசல் அமைக்கும் இடத்தில் நடைபெறும் கால் கோல் விழா நடைபெற்றது. இதில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினோஷ்குமார்,மேயர் இந்திராணி, காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.