இடித்த இடியில் சுக்குநூறான பேருந்து..13 பேருக்கு நேர்ந்த கதி..கோவையில் அதிர்ச்சி | Kovai
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தனியார் பேருந்து, லாரி மீது மோதிய விபத்தில் 13 பேர் காயமடைந்தனர். கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி பயணிகளுடன் தனியார் பேருந்து, மயிலேரிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்ற டிப்பர் லாரி வலது பக்கம் திரும்ப முயன்றது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, லாரி மீது மோதியது. இதில் பேருந்தில் பயணித்த பெண்கள் உட்பட 13 பேர் காயமடைந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.