இன்னும் சிலமணிநேரத்தில் வேறு அவதாரம் எடுக்கப்போகும் ஃபெங்கல்..இன்று இரவு தான் ஆட்டமே ஆரம்பம் ..
இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
821 குடும்பங்களைச் சேர்ந்த 2,770 பேர் நிவாரண நிலையங்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்.குறித்த அனர்த்தத்தால் 6 வீடுகள் இடிந்தும், 265 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
இதேவேளையில் இந்த சீரற்ற காலநிலையினால் வடமாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களின் பாதிப்பு விபரமும் வெளியிடப்பட்டுள்ளது
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வடக்கு மாகாணத்தில்15, 427 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளனர் என மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.
இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2,040 குடும்பங்களைச் சேர்ந்த 7,436 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதுடன் பலரை இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 536 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 861 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதுடன் 56 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் 135 குடும்பங்களைச் சேர்ந்த 442 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அதுமாத்திரமன்றி, மன்னார் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 629 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 910 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 547 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அதேநேரம், வவுனியா மாவட்டத்தில் 87 குடும்பங்களைச் சேர்ந்த 324 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதேவேளையில், மலையகப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பதுளை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீரற்ற காலநிலையினால் கிழக்கின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.இங்கு விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.