சென்னையை நெருங்கும் புயல்.. ஏற்கெனவே முழு அளவை எட்டிய ஏரிகள்.. மழையை தாங்குமா?

Update: 2024-11-27 09:36 GMT

கனமழையினால், செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வள ஆதாரத் துறை பராமரிப்பில் உள்ள 528 ஏரிகளில், 36 ஏரிகள் நிரம்பின. 81 ஏரிகளில் 99 சதவீதமும், 132 ஏரிகளில் 75 சதவீதமும், 185 ஏரிகளில் 50 சதவீதமும் நீர் நிரம்பியுள்ளது. 94 ஏரிகள் 24 சதவீதமும் நிரம்பி உள்ளன. சென்னை மாவட்டத்தில் மூன்று ஏரிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்