கஞ்சா கடத்தி வந்த கும்பல்..தடுத்த காவலரை இடித்து தரையோடு தரையாக இழுத்து சென்ற கார்

Update: 2025-01-02 06:14 GMT

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண வரம் பகுதி வழியாக காரில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ண வரம் சுங்கச்சாவடி அருகே போலீசார் அந்த காரை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த காரில் வந்த கடத்தல் காரர்கள் காவலர்கள் மீது ஏற்றி அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கார் ஏற்றப்பட்ட இரு காவலர்களின் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்