புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய தம்பதி

Update: 2024-11-22 08:02 GMT

ஈரோடு மாவட்டம் நசியனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேற்கு புதூர் பகுதியில்தான் இந்த களேபரச் சம்பவம்..

தங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்துடன், அருகிலுள்ள புறம்போக்கு நிலத்தையும் சேர்த்து ஆக்கிரமித்து ரகுநாதன் - அனிதா என்ற தம்பதியினர் அட்டை வீடு ஒன்றை கட்டி சுமார் 15 ஆண்டுகளாக வசித்து வந்திருக்கின்றனர்..

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பரிமளா என்பவர் தன்னுடைய வீட்டிற்கு செல்லும் பாதையை தம்பதி இருவரும் ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்..

இதன் எதிரொலிதான் இந்த ஒட்டுமொத்த பரபரப்பும்...

நான்கு மாதங்களுக்கு முன்பு பரிமளா வழக்கு தொடர்ந்த நிலையில், இடையில் மூன்று முறை வருவாய்த் துறை அதிகாரிகளுடன் வந்து ஆக்கிரமிப்பு வீட்டை நீதிமன்ற உத்தரவின்படி அகற்ற போலீசார் முயன்றிருக்கின்றனர்.. ஆனால் முடியவில்லை..

இந்நிலையில், சித்தோடு காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு.. தம்பதியின் ஆக்கிரமிப்பு வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் போலீசார் அகற்ற முயன்றிருக்கின்றனர்..

வருவாய் துறையினர் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு உடன்படாத தம்பதியினர், தங்களது வீட்டை இடிக்க கூடாது.. பாதை வசதிக்கு வேறு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.

ஆனால், ஆக்கிரமைப்பை அகற்றுவதில் உறுதியோட நின்ற அதிகாரிகள், புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட ஆறு அடி அகலத்தை சுமார் 30 அடி நீளத்திற்கு இடித்து பாதை வசதி செய்வோம் என கூறி தம்பதியின் வீட்டிற்குள் இருந்த பொருள்களை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கின்றனர்..

இதனால், விரக்தியடைந்த தம்பதி.. திடீரென தங்களது வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்று தாழிட்டு தற்கொலைககு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

பெரும் போராட்டத்திற்கு பிறகு தம்பதி இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்கு அனுமதித்திருக்கின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்