பல்நாடு மாவட்டம் பொல்லப்பள்ளி மண்டலம் வெள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த அனுஷா நரசராவ்பேட்டையில் உள்ள கல்லூரி ஹாஸ்டலில் தங்கி, பிளஸ் டூ படித்து வந்தார். இந்த நிலையில் விடுதி மாடியில் இருந்து குதித்த அவரை, படுகாயங்களுடன் மீட்ட கல்லூரி நிர்வாகம், அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அனுஷா,ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவிகள் எழுதுவதற்காக பயன்படுத்தும் ஒரு பேனா தொடர்பாக சக மாணவிகள் இடையே ஏற்பட்ட சண்டையில் அனுஷா தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.அனுஷாவின் தற்கொலை பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாணவி கீழே குதித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.