இளைஞரின் உயிரை பறித்த ஜல்லி.. "அவரை நம்பித்தான் குடும்பமே இருந்தது.." கண்ணீர் விட்டு கதறி அழும் தாய்

Update: 2024-11-09 17:40 GMT

சின்ன நெல்லி கொள்ளை ‌ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சத்தியசீலன் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து கடலூரில் இருந்து பைக்கில் சின்ன நெல்லிக்குள்ளை கிராமத்திற்கு வந்துள்ளார். சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமத்தில் சென்னை கும்பகோணம் நெடுஞ்சாலையின் நடுவே கட்டுமான பணிக்காக எம்சாண்ட் ஜல்லி ஆகியவை கொட்டி வைக்கப்பட்டுள்ளது.ஜல்லிகற்கள் இரவில் தெரியாததால் வந்த வேகத்தில் அதன் மீது, மோதி, கீழே விழுந்து சத்தியசீலன் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையின் நடுவே ஜல்லி கற்களை கொட்டி வைத்து வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால், பரிதாபமாக ஒரு இளைஞர் உயிர் பறிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்