தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டிப்டாப் உடையில் வந்த இளைஞர் ஒருவர், பாட்டிலில் எடுத்து வந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி கொண்டு தீ பற்ற வைக்க முயன்றார். பாதுகாப்பு பணியில இருந்த காவல் துறையினர் அவரது கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை தட்டி விட்டு, அவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்டு, விசாரணை செய்தனர். அவர் தஞ்சை அருகே உள்ள மாப்பிள்ளை நாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பதும், கலியமூர்த்தி என்பவர் 20 லட்சம் ரூபாய் பணம் பெற்று கொண்டு தராமல் மோசடி செய்து வருவதால், தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். கடுமையான போலீஸார் பாதுகாப்புக்கு இடையே இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.