திருமண நாளில் பெண்ணுக்கு நடந்த சோகம்... தஞ்சாவூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-11-10 02:24 GMT

ஊரணிபுரம் பட்டு விடுதி கிராமத்தை சேர்ந்த தங்கமணி, திருமண நாளில் கணவர், குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். 3 நாட்களாக மழை பெய்த நிலையில் வெயில் அடிக்கவும் துணியை காய வைக்க வீட்டிலிருந்த இரும்பு கம்பியில் கொடி கட்டியுள்ளார். பின்னர் காயப்போட்ட துணிகளை எடுக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டுள்ளார். அவரது முக்கில் இருந்து ரத்தம் வழிந்தது, உயிருக்கு போராடிய வேளையில் அங்கிருந்தவர்கள் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தங்கமணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தங்க மணிக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், திருமண நாளில் அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்