உயிரை பணயம் வைத்து 20 KM லாரியை விடாமல் விரட்டிய வட்டாட்சியர் - திக்திக் இரவு வீடியோ

Update: 2024-12-04 06:24 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில், சினிமா பாணியில் சென்று மணல் கடத்தல் லாரி மடக்கி பிடிக்கப்பட்டது. பாபநாசம் தாலுகாவில் ஒரு லாரி மணல் கடத்தலில் ஈடுபட்டது. அப்போது வேறொரு பணிக்காக வட்டாட்சியர் செந்தில்குமார் வந்திருந்தார். அவரை பார்த்த லாரி ஓட்டுநர், பதற்றமடைந்து, வட்டாட்சியரின் வாகனத்தை மோத முயன்றார். வட்டாட்சியர் நூலிழையில் உயிர் தப்பினார். இதனையடுத்து மணல் கடத்தல் லாரியை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை வட்டாட்சியரின் வாகனம் விரட்டி சென்றது. வட்டாட்சியரின் வாகனத்தை தடுக்கும் வகையில், இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் செயல்பட்டனர். அவர்களையும் சமாளித்து லாரியை வட்டாட்சியரின் வாகனம் பின் தொடர்ந்து சென்றது. ஒரு கட்டத்தில் லாரியை நிறுத்திவிட்டு லாரி ஓட்டுநர் தப்பி சென்றார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்