முன்னோர்கள் வாக்கு.. ஆறு தலைமுறையாக பொங்கல் கொண்டாடாத கிராமம்..! | Tenkasi

Update: 2025-01-14 02:13 GMT

தென்காசி மாவட்டம் கடையம் அருகே முன்னோர்கள் கூறியதால் பல தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராம மக்களின் செயல் கவனம் பெற்றுள்ளது. கேளையாப்பிள்ளையூர் கிராமத்தில், தங்கள் முன்னோர்கள் கூறியதற்கு இணங்க கடந்த 6 தலைமுறைகளுக்கும் மேலாக பொங்கல் கொண்டாடாமல் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், தை மாதம் மூன்றாம் வாரத்தில் அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து தாங்கள் கொண்டாடுவதாகவும், வீடுகளுக்கு முன் பொங்கல் வைப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்