தமிழகத்தை அதிரவிட்ட ஒற்றை சம்பவம்...அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு - கலெக்டர் சொன்ன விஷயம்

Update: 2024-12-19 03:08 GMT

தமிழகத்தை அதிரவிட்ட ஒற்றை சம்பவம்...அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு - கலெக்டர் சொன்ன விஷயம்

மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில், தமிழக, கேரள எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டியுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள், நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் அருகே கொண்டா நகரம் பகுதியில் கொட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இது தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக - கேரள எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புளியரை பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில், தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை ஆய்வு திறந்துபார்த்து ஆய்வு செய்தனர். அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்து, மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் தமிழகத்திற்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்