குடும்பமே சேர்த்து கொள்ளையடித்து...மனைவியை வக்கீலாக்கி; மில் முதலாளி ஆன திருடர்... அதிர வைத்த கேங்

Update: 2024-11-20 15:41 GMT
  • தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திருடிய பணத்தில் நான்கு கோடிக்கு நூற்பாலை விலைக்கு வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கும்பலை கைதுசெய்துள்ள போலீசார், அவர்கள் மீது மேலும் 30 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
  • தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் 2020 ஆம் ஆண்டு ஆட்கள் இல்லாத 5 வீடுகளில் பணம் நகை திருடப்பட்டது. அதேபோல் 2024 ஆம் ஆண்டு 4 வீடுகளில் சுமார் 88 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை திருடப்பட்டது.
  • இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்துவந்த பழனிசெட்டிபட்டி போலீசார்,, சிசிடிவி கேமரா, கைரேகை போன்ற எதுவும் சிக்காததால் குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறினர். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடியபோது, மதுரை மாவட்டம் கருப்பாயூரணி சேர்ந்த மூர்த்தி, மற்றும் பெரியகுளத்தைச் சேர்ந்த அம்சராஜன் ஆகியோருக்கு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
  • இருவரையும் ஏற்கனவே கோயம்புத்தூர் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்திருந்த நிலையில், மூர்த்தி மற்றும் அம்சராஜனை நீதிமன்றத்தில் மனு தாக்கல் அவர்களை காவலில் எடுத்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை செய்தனர்
Tags:    

மேலும் செய்திகள்