குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மருத்துவர் ஜெயசேகரனின் நூற்றாண்டு விழா அனந்தன் நகரில் நடைபெற்றது. இதில் இஸ்ரோ மையத் தலைவர் நாராயணன் பங்கேற்றபின், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் எனவும் அவர் கூறினார். மேலும், இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து சந்திரயான்-5 விண்கலத்தை ஏவுவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.