கையில் ஒரு அடி, கல்லில் ஒரு அடி- Terrific-ஆக மாறிய டிராவல்ஸ் நடிகை-வெளியான வெளுத்தெடுக்கும் காட்சி

Update: 2024-03-20 14:49 GMT

சென்னை சாலிகிராமம் லோகையா தெருவில்பிரான்சிஸ் ரிச்சர்ட் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதே தெருவில் சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகை ராதா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த இரண்டு குடும்பத்தினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், பிரான்சிஸ் ரிச்சர்ட் தன்னை

கேலி செய்ததாக நடிகை ராதா அளித்த புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 14 ம் தேதி இரவு பிரான்சிஸ் ரிச்சர்ட் வீடு திரும்பும் போது, நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண் என இருவரும் சேர்ந்து கைகளாலும், கற்களாலும் தாக்கியதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராதா மற்றும் தருண் ஆகியோர் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தன்னை பற்றி

பிரான்சிஸ் ரிச்சர்ட் ஆபாசமாக பேசியதாலே தாக்கியதாக நடிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்