சாலை மறியல் - மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

Update: 2025-03-16 05:43 GMT
சாலை மறியல் - மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

ராமேஸ்வரத்தில் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த கருணாகரன், சதீஷ்குமார் ஆகிய இருவரை போலீசார் அடாவடியாகக் கைது செய்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தின்போது பெண்கள் இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்