காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்த 11ஆம் வகுப்பு மாணவன் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மாணவன் சசிவணனுக்கு கை, கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், சிசிடிவி கேமராவை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.