பள்ளி வகுப்பறையில் நடந்த பயங்கரம் சம்பவம்... மாணவனுக்கு நேர்ந்த சோகம்

Update: 2024-11-25 13:04 GMT

13 வயதுடைய இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். சிறு வயதிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த வெற்றிவேலனுக்கு அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம் போல இன்று பள்ளிக்குச் சென்ற வெற்றி வேலன் வகுப்பறையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த வகுப்பு ஆசிரியர் வெற்றிவேலனை உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் கதறி அழுதநிலையில், சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்