வெட்டி வைத்த கரும்புகளை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் - அதிர்ச்சி காரணம்
சிவகங்கை அருகே பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக சாகுபடி செய்த கரும்புகளை, அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சாலூர், மலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்ய அரசு சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது. இதனையடுத்து கரும்புகளை வெட்டி வைத்த விவசாயிகள், டோக்கன் பெற்ற ஒரு சிலரிடமே கரும்பு கொள்முதல் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினர். மேலும், வெட்டி வைத்த கரும்புகளை விற்க முடியாமல் தவிப்பதாக கூறிய விவசாயிகள், அனைத்து விவசாயிகளின் கரும்பையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.