போலீசுக்கே அதிர்ச்சி கொடுத்த வீடியோ... எவ்வளவு தைரியம்

Update: 2024-12-10 15:48 GMT

#sivagangai | #police

போலீசுக்கே அதிர்ச்சி கொடுத்த வீடியோ... எவ்வளவு தைரியம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜ கம்பீரத்தில் போலீசார ஒருவரின் புல்லட்டை இளைஞர்கள் இருவர் சொந்த பைக்கை எடுத்துச் செல்வது போல் அசால்டாக திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. தற்போது முத்துராமன் சென்னையில் போலீசாக பணிபுரிந்து வரும் நிலையில், அவர் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த புல்லட்டை இரண்டு இளைஞர்கள் திருடிச் செல்வதாக வந்த தகவலை அடுத்து, திருப்பாச்சேத்தி அருகே தூதை விலக்கு என்ற இடத்தில் ரோந்து போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் பைக்கை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்