பறிபோன பார்வை; மறைந்த தந்தை... படிப்பிலும், விளையாட்டிலும் போராடி வென்று ஊர் திரும்பிய பெண்ணுக்கு தலையில் இறங்கிய இடி

Update: 2024-09-13 08:23 GMT

படிப்பு, விளையாட்டு, என அனைத்திலும் திறமையாக இருந்த மாற்றுத்திறனாளி, வேலைவாய்ப்பின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழநெட்டூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி, ராஜேஸ்வரி தம்பதியின் மகள் தான் சரண்யா...

பிறந்ததிலிருந்தே கண் பார்வை குறைபாடுடன் அவதிப்பட்டு வந்த சரண்யா, 11 வயதில் தந்தையை இழந்திருக்கிறார்.

பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த சரண்யாவுக்கு, மீண்டும் கண்பார்வையை மீட்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்து விட்ட நிலையில், மனம் தளராமல் தனது படிப்பை தொடர்ந்துள்ளார் சரண்யா..

கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிக்கூடத்தில் படித்த நிலையில், அதிக மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.

தொடர்ந்து இளநிலை ஆங்கில பட்டப்படிப்பை முடித்த நிலையில், விளையாட்டிலும் கெட்டியாகவே விளங்கியுள்ளார் சரண்யா.

ஷாட் புட், Javeline விளையாட்டுகளில் பாரா ஒலிம்பிக் தகுதிக்காக தமிழ்நாடு அளவில் விளையாடி வெற்றி பெற்று தேசிய அளவிலான விளையாட்டில் பங்கேற்று அங்கு நான்காவது இடத்தை பெற்றுள்ளார் .

வேலை வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சூழலில் சொந்த ஊருக்கே திரும்பியிருக்கிறார் அவர். ஆனால் அங்கு அவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

எவ்வித அடிப்படை வசதியுமின்றி ஒரு கதவுக் கூட இல்லாத அவலநிலையே நீடித்து வருகிறதாம்..

இதனால் எவ்வித அடிப்படை வசதியுமில்லாமல் தவித்து வருகிறார் சரண்யா...

பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டலாம் என நினைத்த சூழலில், வீடு கட்டுவதற்கு பங்கு பணம் போட வேண்டும். ஆனால் அதற்கும் வசதி இல்லாததால் அந்த வீடும் கட்ட முடியாத நிலையே உள்ளதாம்..

இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும் தன்னம்பிக்கையுடன் பேசும் சரண்யா, தன்னையும், தன் தாயையும் பார்த்துக் கொள்ள ஒரு வேலைவாய்ப்பு மட்டும் கொடுத்தால் போதும் என்கிறார்...

Tags:    

மேலும் செய்திகள்