சங்கரன்கோவிலை உலுக்கிய மர்ம சாவு... வெளியான வீடியோ | Sankarankovil | Thanthitv
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மது போதையில் டூரிஸ்ட் வேன் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக, அதன் ஓட்டுநர் முருகன் என்பவரை, காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். ஆனால், அங்கு வேன் ஓட்டுநர் முருகன் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசார் தாக்கியதால் முருகன் உயிரிழந்ததாக கூறி, அவரது உறவினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர், காவல் நிலையம் முன்பு முருகனின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது..