சேலத்தில், பட்டறை அதிபர் கொலை வழக்கில் 16 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-11-11 09:05 GMT

சேலம், வெள்ளாளகுண்டத்தில் உள்ள பீரோ பட்டறைக்கு சென்று கொண்டிருந்த பட்டறை சரவணன் என்பவர், கடந்த 8ஆம் தேதி பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த கணேஷ் ஜீவா, சூர்யா, பன்னீர்செல்வம், சாரதி, ஆனந்தராஜ், பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் மனைவி சூர்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலையில் ஈடுபட்டவர்களுக்கு, சரவணன் பண

உதவி அளித்து, கொலைக்கான திட்டத்தையும் வகுத்துக் கொடுத்ததால் பழிக்குப்பழியாக கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய கார்த்திக், கந்தசாமி, பூபாலன், உள்ளிட்ட 10 பேர் சேலம் மாநகர காவல் உயர் அதிகாரிகளிடம் பின்னர் சரண் அடைந்தனர்.

பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர்களுடன் இணைந்து கடந்த சில நாட்களாக சரவணனை பின்தொடர்ந்து சென்று நோட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் திட்டப்படி காரை கொண்டு மோதி சரவணனை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு அதே காரில் தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் கைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்