முதியோர் பணம் வாங்கி தருவதாக கூறி பலகோடி ருபாய் சுருட்டல் - ஆசை வார்த்தையால் விபூதி அடித்த பெண்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்புடைய இ சேவை நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் வீதியில்
இ-சேவை மையம் நடத்தி வரும் கார்திகா என்பவர்,
கிராம மக்களை மட்டுமே குறிவைத்து அவர்களுக்கு
அரசு வேலை மற்றும் முதியோர் உதவித்தொகை
உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வாங்கித் தருவதாக
கூறி பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார்.
முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி
அதற்கு போலியாக ஏடிஎம் கார்டை தயாரித்து
வழங்கியுள்ளார். அவரின் ஆசை வார்த்தையை நம்பி
லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்த பொது
மக்கள் புகார், அளிக்க ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் கடந்த 10ம் தேதியன்று கார்த்திகாவின் இ-சேவை மையத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்து, அந்த மையத்திற்கு சீல் வைத்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.