`விதிகளை மீறிய சிப்காட் தொழிற்பேட்டை' - கேள்விகளால் அதிகாரிகளை திணற வைத்த மக்கள்

Update: 2025-01-01 12:21 GMT

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்படும் தோல் தொழிற்சாலைகள் 0% டிஸ்சார்ஜ் விதியை கடைபிடிக்க வேண்டும். அதாவது கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். இதற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதால் விதிகளை காற்றில் பறக்கவிடும் ஆலைகள் கழிவுநீரை கால்வாய்களில் வெளியேற்றுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அப்படி நேரடியாக கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றிய நிறுவன காவலாளியோடு மக்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குவந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அதிகாரிகள் பதில் சொல்லாமல் சென்றனர். இப்படி கழிவுநீரை வெளியேற்றுவதால் விவசாயம் பாதிக்கிறது, பல்வேறு நோய்கள் பரவுகிறது, மாடுகளுக்கு கூட நோய் வருகிறது என வேதனை தெரிவிக்கும் மக்கள், விதிகளை மீறும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்