ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில், இரண்டு இளைஞர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். தனியங்கூட்டம் கிராமத்தில் உள்ள நொண்டி கருப்பணசாமி கோவில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தய எல்லையை தொட்டு விட்டு காளைகள் சீறிப்பாய்ந்து திரும்பிக்கொண்டிருந்தன. அப்போது நல்வாய்ப்பாகதிடீரென மாட்டுவண்டியின் பக்கவாட்டில் இளைஞர்கள் பைக்கில் நுழைந்து செல்ல முயன்றனர். அப்போது, பைக் மீது மாட்டுவண்டி மோதி, அதன் மீது ஏறிச்சென்றது.
இதில் லேசான காயங்களுடன் இரண்டு இளைஞர்களும் உயிர்தப்பினர்.