காற்றில் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து இறந்த 2 பெண்கள்- நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்
கள்ளக்குறிச்சி அருகே சென்னை புறவழிச்சாலையில் உள்ள சலவையகத்தில் மாடூர் கிராமத்தைச் சேர்ந்த வேம்பு, சுமித்ரா பணிபுரிந்து வந்துள்ளனர். இரவு பணி முடித்துவிட்டு தோழிகளுடன் புறவழிச்சாலையோரம் நடந்துச் சென்றுகொண்டிருந்த போது, தியாகதுருகம் நோக்கி அதிவேகமாக வந்த கார் இவர்கள் மீதும், இருசக்கர வாகனம் மீதும் மோதியுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மாடூர் கிராமத்தைச் சேர்ந்த வேம்பு, சுமித்ரா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். காரை அதிவேகமாக ஓட்டி சென்ற ஓட்டுநரை போலீசார் மடக்கிபிடித்தபோது குடிபோதையில் இருந்தது தெரியவர, அவரை கைது செய்தனர்.