பாசிப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் மகள் வைத்தீஸ்வரி , பாலமுருகன் மகள் ப்ரீத்தி மற்றும் நாயகம் மகள் நர்மதா ஆகிய மூன்று சிறுமிகளும்
அங்குள்ள பள்ளிவாசலுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மூவருக்கும் நீச்சல் தெரியாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூவரும் நீரில் மூழ்கி உள்ளனர். உடனே அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்ற நிலையில், அங்கே ஏற்கனவே வைத்தீஸ்வரி மற்றும் ப்ரீத்தி ஆகிய இரண்டு சிறுமிகள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உயிருக்கு போராடிய நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் நர்மதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.