மட்டன் பிரியாணி, கறிசோறு, மீன் சாப்பாடு 'எல்லாமே இலவசம்..' கொலைப்பசி Boys கொடுக்கும் செம்ம விருந்து

Update: 2025-03-16 05:50 GMT

ராமநாதபுரத்தில் 9 ஆண்டுகளாக நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு அசைவ உணவுகளை தரமாகவும் இலவசமாகவும் வழங்கி வரும் இளைஞர்கள் குறித்த செய்தித் தொகுப்பினை தற்போது பார்க்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடை பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கொலைப்பசி நண்பர்கள் என்ற பெயரில் ரம்ஜான் நோன்பு இருக்கும் முதியவர்கள், உணவு சமைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் உள்ளிட்டோருக்கு அதிகாலையில் உண்ணக்கூடிய சஹர் உணவினை வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர். தினந்தோறும் 800-க்கும் மேற்பட்டோருக்கு இளைஞர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.

நோன்பு துவங்கி 14 நாட்கள் ஆன நிலையில் தினந்தோறும் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கறிசோறு நெய் சோறு, மீன் சாப்பாடு போன்ற உணவுகளை அதிகாலை நேரத்திலேயே நோன்பாளிகளின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது. சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தரமான பொருட்களைக் கொண்டும் இந்த உணவுகளை தயாரித்து வழங்கும் இளைஞர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்