மாணவிகளிடம் எல்லை மீறிய ஆசிரியர்.. 2 ஆண்டுக்கு முன் மாணவிகள் செய்த செயல் - கொந்தளித்த பெற்றோர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தூண்டலில் ஆசிரியர் ஈடுபட்டதாக மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு புகார் அளிக்க வந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அதிகாரிகள் சக மாணவ- மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினர். ஆசிரியர் சரவணனின் நடவடிக்கை சரியில்லை என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே மாணவிகள் புகார் பெட்டியில் புகார் தெரிவித்த நிலையில், அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது இது போன்ற பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம் என பெற்றோர்கள் முறையிட்டனர்.