நிற்காமல் வேலையை காட்டும் கனமழை..தனித்தீவாக காட்சியளித்த வயல் நிலங்கள் | Rain
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான கச்சேரி சாலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மழைநீர் வடிகாலை சீரமைக்கும் பணியானது நடந்ததால் சாலையின் ஒருபுறம் சேரும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ,மழைக்காலம் தொடங்கும் முன்னரே இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்க வேண்டும் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.