ஊரே வியந்து பார்த்த சீர் வரிசை.. "தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி" -மேளதாளத்துடன் அசரவைத்த தாய்மாமன்
புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி மாமுண்டி - சாந்தி தம்பதியின் மகன் ஆதேசுக்கு இன்று காதணி விழா உடையாளிப்பட்டியில் நடைபெற்றது. சிறுவனின் தாய்மாமனான பிரபல ஜல்லிக்கட்டு வர்ணணையாளர் செங்குட்டுவன், தமது சகோதரருடன் இணைந்து, பிரம்மாண்டமான சீர் வரிசை பொருட்களை கொண்டு வந்து கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 30 வகையான பழங்கள், பல வகையான பாத்திரங்கள், டி.வி. பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், இருசக்கர வாகனம், சைக்கிள், வெள்ளி, தங்க நகைகள், ஜல்லிக்கட்டு காளை, கன்றுடன் பசு உள்பட 500-க்கும் மேற்பட்ட பொருட்களை டாரஸ் வண்டியில் வைத்து, மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து மருமகனுக்கு சீர் வரிசைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.