புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தேர் கவிழ்ந்த விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமசாமிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தேர்த் திருவிழா நடைபெற இருந்தது. இதையொட்டி தேரை அலங்கரிக்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தேரை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த மகாலிங்கம் என்ற முதியவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். காயமடைந்த 5 பேர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் விபத்து தொடர்பாக அறந்தாங்கி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.