சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன் ஜாமின் மனு நீதிபதி சுந்தர் மோகனிடம் விசாரணைக்கு வந்தபோது, தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜ் கடந்த 13ம் தேதி கேரள மாநிலம் மூணாறில் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.