குழந்தையை கடத்திய வடமாநில இளைஞர் - ஹீரோவாக மாறிய ஆட்டோ ஓட்டுநர் - முழு கதையை கேட்டா பதறிடுவீங்க

Update: 2024-12-14 13:24 GMT

மதுரை திருநகரை சேர்ந்த வினோத்குமார் என்பவரது ஐந்து வயது மகளை, பாட்டி செல்வி, சிகிச்சைக்காக அரசரடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, வடமாநில இளைஞர் ஒருவர் சிறுமியை நோட்டமிட்டு பின்னால் வந்துள்ளார். பின்னர் பாட்டி இல்லாத நேரத்தில் சிறுமியை தூக்கிக்கொண்டு, மருத்துவமனை வெளியே ஆட்டோவில் ஏற்றி தப்ப முயன்றார். அப்போது, குழந்தை கூச்சலிட்டதால் சுதாரித்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வடநாட்டு இளைஞரை பிடித்தார். தகவலறிந்து சென்ற போலீசார், வடநாட்டு இளைஞரிடமிருந்து சிறுமியை மீட்டு, பாட்டியிடம் ஒப்படைத்தனர். பின்னர் வடநாட்டு இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்