வந்தது உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..மக்களே உஷார் | Cuddalore | Flood
கொள்ளிடம் காவிரி ஆற்றில் 18 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறந்து விடப்படுவதால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வரும் சூழலில், அணையிலிருந்து சுமார் 35 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் 18 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறந்து விடப்படுவதாலும், இது மேலும் அதிகரிக்க கூடும் என்பதாலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.