பாரம்பரிய உடையில் காவலர்களுடன் பொங்கல் கொண்டாடிய டிஜிபி சங்கர் ஜிவால் | Shankar Jiwal
சென்னை அடுத்த ஆவடியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், காவலர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார். ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் பாரம்பரிய உடையில் பங்கேற்ற டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காவலர்களுடன் பொங்கல் வைத்து மகிழ்ந்த அவர், பல்வேறு போட்டிகளை கண்டு களித்தார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி டிஜிபி பாராட்டு தெரிவித்தார்.