அய்யோ.. இந்த வீடியோ எப்படி லீக் ஆச்சு? - பதற்றத்தில் தலையை பிய்த்து கொள்ளும் காவல்துறை

Update: 2024-11-09 10:18 GMT

கடந்த 2 தினங்களுக்கு முன்பாக மைக்கேல்பாளையத்தைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் பவானிசாகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் கார்த்தி என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல் நிலையத்தில் காவலர் கார்த்திக் குடிபோதையில் மற்ற காவலர்களை தரக்குறைவாக பேசி, நீங்கள் லஞ்சம் வாங்கும் பட்டியல் என்னிடம் உள்ளது என மிரட்டல் விடுத்தார்... விசாரணை கைதிகளை அடைத்து வைக்கும் கைதிகள் அறையில் கார்த்திக்கை வைத்திருந்த போது அவருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. அங்கிருந்த காவலரை காலால் உதைக்க முற்பட்டதுடன் கடுமையாக மிரட்டல் விடுத்தார் கார்த்திக்... ஆவணத்திற்காக காவல் நிலையத்தின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் யாரோ ஒருவரால் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது... இந்த வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியிட்டவர் மீது காவல் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்