2025-ல் பாமகவில் அதிரடி மாற்றங்கள்... அன்புமணியின் திடீர் முடிவால் பரபரக்கும் பனையூர்
பாமக மாநில இளைஞர் அணி தலைவர் நியமனத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பொதுக்குழுவில் கருத்து வேறுபாடு
அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமித்ததை மேடையிலேயே அன்புமணி எதிர்த்தார்
புத்தாண்டில் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச அன்புமணி நடவடிக்கை
இரண்டாவது நாளாக இன்றும் மாவட்ட செயலாளர்கள் உடன் அதிரடி ஆலோசனை
தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூர் அலுவலகத்திற்கு மாற்றம்
தற்போது திருவண்ணாமலை , வேலூர், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார்
பனையூர் அலுவலகத்தில் நாளையும் 3வது நாளாக பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
ஏற்கனவே திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஒன்பது மாவட்ட செயலாளர்களை நேற்று முன்தினம் பனையூர் அலுவலகத்தில் சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்தினார்
இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்ட செயலாளர்களையும் தொடர்ச்சியாக சந்தித்து, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து அன்புமணி கருத்து கேட்கிறார்
கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் உறுதி என்று ராமதாஸ் கூறிய நிலையில், வேகம் எடுக்கும் அன்புமணி