"சமவெளியிலும் மிளகு சாகுபடி சாத்தியமே" விவசாயக் கருத்தரங்கை தொடங்கி வைத்த அமைச்சர்
மிளகு சாகுபடி தான் சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, விவசாயிகளின் பொருளாதாரத்தையும் உயர்த்தித் தருகிறது என்று, அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்காடு பட்டிப்புஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜாக்கண்ணு, சமதளத்தில் மலைப்பயிரான மிளகை விவசாயம் செய்து நல்ல சாகுபடியும் ஈட்டி வருகிறார். சமவெளியிலும் மிளகு பயிர் சாத்தியமே என விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கு ஆலங்குடியில் நடைபெற்றது. இதை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.