சுற்றுலா பயணிகளை கவர்ந்து, தங்களின் வருமானத்தை பெருக்க, இந்த பாண்டா கரடிகளை சீனாவிடம் இருந்து ஒப்பந்தம் செய்து வாங்கியது பின்லாந்து நாட்டின் அஹ்டாரி பூங்கா...
சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால் பூங்கா நிர்வாகம் அதிருப்தி
பூங்காவுக்குள் இந்த பாண்டாக்கள் வந்த நேரமோ என்னமோ... சரியாக பின்லாந்தில் பாண்டாக்கள் என்ட்ரி கொடுத்தபோது கொரோனோ தொற்றால் உலகமே முடங்கியிருக்கிறது...
இதனால், பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றிருக்கிறது..
பாண்டாக்களின் பரமாரிப்பு செலவு 88 கோடியை தாண்டியதாக குமுறல்
அதேநேரம், இந்த பாண்டாக்களின் பராமரிப்பு செலவு நாளுக்குநாள் எக்குதப்பாக எகிறியிருக்கிறது...
சேட்டைக்கார பய சார் என்பது போல பாண்டாக்களின் சேட்டைகளை ரசிப்பது மறந்து செலவு வந்து நின்றிருக்கிறது பிரச்சினையாக..
அதுவும் கொஞ்ச நஞ்சம் அல்ல.. இரு பாண்டாக்களின் பராமரிப்பு செலவும் 88 கோடிக்கும் மேல் சென்றதால் திகைத்து நின்றிருக்கிறது பூங்கா நிர்வாகம்..
சீனாவிடமே திருப்பி ஒப்படைக்க பின்லாந்து முடிவு
அப்புறம் என்ன, நீ திரும்பி அமெரிக்காவுக்கே போய்டு சிவாஜி என்ற பாணியில், நீங்க ரெண்டு பேரும் சீனாவுக்கே திரும்பி போய்டுங்க என முடிவெடுத்து, இரு பாண்டாக்களையும் பூங்கா நிர்வாகம் சீனாவிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...