பல்லடம் கொலை வழக்கில் பகீர்.. சட்டையை கழட்டி ஆதாரம் காட்டிய நபர்..``எங்கள விட்டுருங்க..''கதறிய மனைவி

Update: 2024-12-16 07:00 GMT

பல்லடம் கொலை வழக்கில் பகீர்.. சட்டையை கழட்டி ஆதாரம் காட்டிய நபர்.. 15 வருடம் தவமிருந்து பெற்ற குழந்தையை வைத்து கதறிய மனைவி

பல்லடம் மூவர் கொலை வழக்கில், செய்யாத குற்றத்தை ஒத்துக் கொள்ளுமாறு போலீசார் சித்ரவதை செய்வதாக, தொழிலாளி ஒருவர், ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார். இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்..

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கடந்த 28 ஆம் தேதி, மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் கொலை நடந்து 2 வாரங்களை எட்டிய நிலையிலும், இதுவரை சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல்கள் என எந்த துப்பும் கிடைக்காததால், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல், 14 தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.

இந்த சூழலில் தான், தோட்டத்தில் வேலைப் பார்த்தவரை விசாரணைகாக அழைத்து சென்று நடந்த குற்றத்தை ஒத்துக்கொள் எனக் கட்டாயப்படுத்தும் போலீசார், தன்னை அடித்து சித்ரவதை செய்வதாகவும், தனது குழந்தையையும், மனைவியையும் தூக்கி உள்ளே வைத்து விடுவதாகவும் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார், அந்த பகுதியைச் சேர்ந்த பால்ராஜ்..

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தாலும், போலீஸ் அடித்து துன்புறுத்துவதாகவும், 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற குழந்தையோடு குடும்பமே கதிகலங்கி நிற்பதாக கண்ணீர் வடிக்கிறார், பாதிக்கப்பட்ட பால்ராஜின் மனைவி சிவகாமி..

இப்படியாக, விசாரணை என்ற பெயரில் பல்வேறு சித்ரவதைகளை செய்து வரும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்களது தரப்பு வாதத்தை பரிசீலித்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பால்ராஜ் குடும்பத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்