ஆத்திரத்தில் ஊரோடு கிளம்பிய மக்கள்.. முற்றிய வாக்குவாதம் - திருப்பூரில் பரபரப்பு

Update: 2025-03-16 03:04 GMT

பல்லடம் அருகே எதிர்ப்பை மீறி நாப்கின் தயாரிக்கும் ஆலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டது தொடர்பாக, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாவிபாளையம் பகுதியில் நாப்கின் தொழிற்சாலை கட்ட ஊராட்சி நிர்வாக அனுமதி பெற்று கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்களது எதிர்ப்பை மீறி கட்டுமானத்திற்கு அனுமதி கொடுத்தது யார் என கேட்டு பொதுமக்கள் ஊராட்சி செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு தெரியாமலேயே வட்டார வளர்ச்சி அலுவலர் அனுமதி வழங்கியதாக செயலாளர் கடிதம் அளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்