திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியைச் சேர்ந்த தம்பதி சிலம்பரசன் அகிலாண்டேஸ்வரி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் சிலம்பரசன் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனி அறையில் தூங்கிய இரு குழந்தைகளும் காலையில் எழுந்து பார்த்த போது தாய் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடப்பதும், தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்த அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் இருவரும் அவர்களது உறவினர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.வீட்டிற்கு வந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் போலீசார் இருவரது சடலத்தை மீட்டு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.